Saturday, December 13, 2008

ஒரு அபாயகரமான உண்மை(எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.)




சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றில் வந்த செய்தி இது.....

அமெரிக்காவில் வடக்கு டெக்ஸாஸில் ஒரு பெண்மணி ஒரு படகுப்பயணத்தின் போது அருந்துவதற்காக கோக் டின்களுடன் படகில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் நடுவே மயங்கிய நிலையில் திங்களன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதனன்று மரணமடைந்தார்.



பிரேத பரிசோதனை பெண்மனிக்கு ”லெப்டோஸ்பரஸிசஸ்” எனும் நோயினால் இறப்பு நேர்ந்திருப்பதாக கூறியது.தொடர் விசாரணையில் அந்த பெண் அருந்திய கோக் பான டின் மூலம் நோய் ஏற்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது.கோக் டின்னின் மூடியின் மேல் இருந்த காய்ந்து போன எலியின் சிறுநீரே இந்த நோய்க்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.எலிகளின் சிறுநீரில் மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான தொற்றுநோய் கிருமிகள் உள்ளது.



எனவே இந்த மாதிரி குளிர்பானங்களை டின்கள் மூலமாக அருந்தும் முன் மேல் மூடியை நன்றாக கழுவிய பின்னரே அருந்த வேண்டும்.குளிர்பான டின்களை கிடங்குகளில் சேகரித்து வைக்கும்போது கூட அவை எலிகள் மூலம் பாதிக்கப்படலாம்.கடைகளில் வினியோகம் செய்யப்படும்போதும் அவை சுத்தம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே..



சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த சோடா டின் மேல்மூடிகள் பொது கழிப்பறையை விட கிருமிகளாலும்,பாக்டீரியாக்களாலும் தாக்கப்பட்டு அசுத்தம் நிறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.



எனவே இனி குளிர்பானங்களை குடிக்க வாயருகே கொண்டு செல்லுமுன் நன்றாக சுத்தமாக கழுவிவிட்டு அருந்தவும்.எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger