Friday, February 6, 2009

ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்





1993 மும்பை குண்டு வெடிப்பின் பொழுது நடந்தது என்ன? என்பதை ”ப்ளாக் ஃப்ரைடே” என்னும் இந்திப் படம் விரிவாக காட்டுகிறது.



2004ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி கேஸ் போட்டதால் வழக்கு நடந்து, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுள்ளது.



ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை அப்படியே சினிமாவாக எடுத்துள்ளனர் மிட் டே பத்திரிகைக்காரர்கள். அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். இது டாக்குமெண்டரி அல்லது உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு. உலகப் புகழ் பெற்ற படங்களுக்கு நிகரான ஒரு தரமான தொழில்நுட்பம் அமைந்த நேர்த்தியான தயாரிப்பு. அநாவசியக் காட்சிகள் இல்லை. நடந்தது நடந்தபடி காண்பிக்கப் படுகின்றன.



நம் நண்பர்கள் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இன்று நிலவும் பயங்கரவாதத்தின் கோர முகம். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொடரும் பயங்கரத்தின் ஆவணம். அவசியம் பாருங்கள்.



பட்த்தை பற்றிய ஒரு முழுமையான ஆழ்ந்த விமர்சனத்திற்கும், அறிமுகத்திற்கும் http://www.tamilhindu.com/ மற்றும் http://nitawriter.wordpress.com/2007/02/10/black-friday-a-movie-review/ தளங்களை பார்வையிடவும்.


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger