Wednesday, December 24, 2008

காந்தி மகாத்மா ஆனது எப்படி?

காந்திஜி ஒருவிரலை அசைத்தால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே அந்த திசையில் அடிபணிந்தது. அவர் சொன்னார் என்பதற்காக அடிஉதைகள் வாங்கியது. மாசக்கணக்கில், வருஷக்கணக்கில் கம்பி எண்ணியது.
காந்தி ஆங்கிலத்திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். காந்தி சிறையிலிருப்பார். போராட்டத்தை அபுல்கலாம் ஆஸாத் தலைமை ஏற்று நடத்திச் செல்வார். அப்போது மக்களை அழைத்து அவர் சொல்வார், “They want us to fight back or lose heart. We will do neither”. அழகான வசனம். காந்தியத்திற்கு ஒரு அருமையான உதாரணம்.
எப்படி அந்த மனிதருக்கு மட்டும் அவ்வளவு சக்தி வந்தது? எங்கிருந்து? சும்மா யாரையாவது கூப்பிட்டு ‘மகாத்மா’ என்று பட்டம் கொடுத்துவிட்டால் அந்த சக்தி வந்துவிடுமா?இந்த கேள்விக்கு பதிலைத் கடைசியில் மகாத்மாதான் சொன்னார். பூடகமாக. அவரின் சுய சரிதை மூலமாக.
ஒருசில தடவைகள் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக மட்டனையும் அது கலந்த உணவையும் நண்பனின் சிபாரிசின் பேரில் மகாத்மா சாப்பிட்டுள்ளார். கெட்ட சகவாசம். ஆனால் அவர் சாப்பிட்டதற்கான காரணம் இருக்கிறதே அதுதான் ஒரு மகாத்மாவை அடையாளம் காட்டுவதாக உள்ளது. Mahatma in the making!
அந்தக் காரணம் என்ன தெரியுமா? மட்டன் ரொம்ப சுவையானது என்பதல்ல.(இது நாம் சாப்பிடுவதற்கான காரணம்). ஒழுங்காக சமைத்த மட்டன் சுவையாக இருக்கும் என்ற விஷயம்கூட பாவம் அவருக்குத் தெரியாது! பின் ஏன் சாப்பிட்டார்?
மாமிசம் சாப்பிட்டால் பலம் வருமாம். எப்போதும் அதைச் சாப்பிடுகிற ஒரு பலசாலியான நண்பன் சொன்னது. இந்தியர்கள் காந்தி மாதிரி நோஞ்சானாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலும் அவர்கள் காய்கறி சாப்பிடுபவர்களாக இருந்ததுதான். வெள்ளைக்காரர்கள் வலிமையுடன் இருந்ததற்குக் காரணம் அவர்கள் மாமிச உணவு உண்டதுதான். எனவே அவர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேற்றி வெற்றி கொள்ள ஒரே வழி எல்லா இந்தியர்களும் மாமிசம் புசித்து பலசாலி ஆவதுதான் என்று ரொம்ப சத்தியமாக மகாத்மா நினைத்தார்! இது அவர் பள்ளிப்பருவ சிந்தனை! பின்னாளில் அவர் ‘திருந்தி’ சைவத்துக்கு மாறியது தெரிந்ததே.
இங்கே நாம் அடிக்கோடிட வேண்டியதெல்லாம் சைவ உணவு பலம் தரக்கூடியதா அல்லது அசைவ உணவா என்பதற்கான பதிலை அல்ல. ஒரு பள்ளிச் சிறுவன் தன் உணவுப் பழக்கங்களை நாட்டு நலன் கருதி மாற்றிக்கொண்டிருந்திருக்கிறான் என்பதையே!




கருத்தாக்கம்:நாகூர் ரூமி
http://www.nagorerumi.com/?cat=7&paged=6




Saturday, December 13, 2008

ஒரு அபாயகரமான உண்மை(எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.)




சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றில் வந்த செய்தி இது.....

அமெரிக்காவில் வடக்கு டெக்ஸாஸில் ஒரு பெண்மணி ஒரு படகுப்பயணத்தின் போது அருந்துவதற்காக கோக் டின்களுடன் படகில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் நடுவே மயங்கிய நிலையில் திங்களன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதனன்று மரணமடைந்தார்.



பிரேத பரிசோதனை பெண்மனிக்கு ”லெப்டோஸ்பரஸிசஸ்” எனும் நோயினால் இறப்பு நேர்ந்திருப்பதாக கூறியது.தொடர் விசாரணையில் அந்த பெண் அருந்திய கோக் பான டின் மூலம் நோய் ஏற்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது.கோக் டின்னின் மூடியின் மேல் இருந்த காய்ந்து போன எலியின் சிறுநீரே இந்த நோய்க்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.எலிகளின் சிறுநீரில் மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான தொற்றுநோய் கிருமிகள் உள்ளது.



எனவே இந்த மாதிரி குளிர்பானங்களை டின்கள் மூலமாக அருந்தும் முன் மேல் மூடியை நன்றாக கழுவிய பின்னரே அருந்த வேண்டும்.குளிர்பான டின்களை கிடங்குகளில் சேகரித்து வைக்கும்போது கூட அவை எலிகள் மூலம் பாதிக்கப்படலாம்.கடைகளில் வினியோகம் செய்யப்படும்போதும் அவை சுத்தம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே..



சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த சோடா டின் மேல்மூடிகள் பொது கழிப்பறையை விட கிருமிகளாலும்,பாக்டீரியாக்களாலும் தாக்கப்பட்டு அசுத்தம் நிறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.



எனவே இனி குளிர்பானங்களை குடிக்க வாயருகே கொண்டு செல்லுமுன் நன்றாக சுத்தமாக கழுவிவிட்டு அருந்தவும்.எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.

Friday, December 5, 2008

சொர்க்கமும் நரகமும்



ஒரு சமயம் குரு நானக் சொர்க்கம் என்றால் என்ன ? நரகம் என்றால் என்ன? என்று அறிய கடவுளை காண சென்றார். குரு நானக் தன் மனதில் எழுந்த கேள்வியை கடவுளிடம் கூறினார்.

இதை கேட்ட கடவுள் மென்மையாக சிரித்துவிட்டு "அதோ தெரிகிறது பார் ஒரு கதவு அதை திறந்து பார் உன்னுடைய கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று கூறினார்.

குரு நானக் பெயர் ஏதும் எழுதபடாத அந்த கதவை திறந்து பார்த்தார்.

அங்கு ஒரு மேடையின் மீது நிறைய வித்தியாசமான ருசிமிக்க உணவுகளும், அபூர்வ வகை பழங்களும் மற்றும் நிறைய அமுத பானமும் இருந்தன. அந்த மேடையை சுற்றி மனிதர்கள் மிகவும் துன்பத்துடன் இருந்தனர். அவர்கள் கையில் மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி இருந்தது. அவற்றை கொண்டு அந்த உணவுகளை மனிதர்கள் சாப்பிட துடித்தனர் ஆனால் மிக நீண்ட கரண்டி என்பதால் அவர்களால் உணவுகளை வாயருகே கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த காட்சியை கண்ட குரு நானக் அதிர்ச்சி அடைந்தார். இது தான் நரகம் என்று அறிந்தார்.

மீண்டும் கடவுளிடம் சென்று, "நான் உண்மையான நரகத்தை பார்த்துவிட்டேன், சொர்க்கம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்" என்று சொன்னார்.

கடவுள் அதே கதவை திறந்து பார் என்றார். குரு நானக் மீண்டும் அந்த பெயர் இல்லாத கதவை திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆனந்தத்தில் மூழ்கடித்தது.

அங்கும் ஒரு மேடையின் மீது ருசி மிக்க உணவு வகைகளும், அரிய பழ வகைகளும் மற்றும் அமுத பானமும் நரகத்தில் இருந்தது போலவே மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி தான் இருந்தது. ஆனால் அங்கு மனிதர்கள் ஒருவர் கரண்டியை கொண்டு மற்றவருக்கு ஊட்டி தானும் மற்றவர் கரண்டியால் ஊட்டும் உணவினை உண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதை கண்ட குரு நானக் இதுவே சொர்க்கம் என்று மனம் தெளிந்தார்.

பிறகு கடவுளிடம் வந்து, "சொர்க்கம் எது ? நரகம் எது ? என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன்" என்றார்.

கடவுள் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி "சொர்க்கமும் நரகமும் வாழும் நம் வாழ்கையில் தான் உள்ளது. நரகத்தில் தான் மட்டும் உண்ண வேண்டும் என்று சுயநலத்துடன் நினைப்பதால் அவர்களால் அந்த நீண்ட கரண்டியை கொண்டு உணவை சாப்பிட முடியாமல் துன்பம் அடைகிறார்கள், அதே சொர்க்கத்தில் அந்த நீண்ட கரண்டியை கொண்டு சுயநலம் இன்றி மற்றவர்களுக்கு அந்த கரண்டியை கொண்டு ஊட்டி தானும் அதன் மூலம் பயன் அடைகிறார்கள். இதில் இருந்து நாம் அறியும் உண்மை மற்றவர்களை வாழவைத்து, நாமும் அதன் மூலம் வாழ்வதுதான் உண்மையான சொர்க்கம். இந்த உண்மையின் தத்துவத்தை அனைவருக்கும் நீ எடுத்து கூறுவாயாக", என்று கடவுள் குரு நானக்கிடம் சொன்னார். அதனை குரு நானக் அவர்களும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொன்னார்.


ஓம் எனும் மந்திரம்



'ஓம்' என்ற சொல்லே நம் உள்ளம் என்னும் திருக் கோவிலைத் திறக்க உதவும் ஒரே திறவுகோல்.அதற்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும், அந்தத் திருக்கோவிலினாற்றல் வளாகத்தை நமக்கு உணர்த்தும் ஒளிவிளக்குகள்.அதனால்தான், அனைத்து மந்திரங்களும் "ஓம்" என்ற ஒலியுடன் தொடங்குகிறது.

ஓம்.......என்ற ஒலி மூன்று படிகளை உடையது.

அதாவது, அகரம், உகரம், மகரம் என்ற ஒலி நிலைகள்.

பயிற்சியின்போது ஐந்து நிலைகளாக விரியும்.

அகரம் - விழிப்பு நிலை.

உகரம் - கனவு நிலை

மகரம் - உறக்க நிலை

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....என்ற தொடர் ஒலி , கனவற்ற உறக்கத்தை உணர்த்தும் துரிய நிலை.

தொடர் ஒலியின் இறுதில் ஏற்படும் அமைதி. தன் இழந்த சமாதி நிலை.. அதை துரியாதீத நிலை என்போம்.

ஆக , ஐந்து நிலைகள்.

Tuesday, November 25, 2008

மகாபாரதம் - ஒரு மகா காவியம்

எதற்காக இதிகாசங்கள் படிக்கப் பட வேண்டும் ?

நமது புத்தக வாசிப்பு பழக்கம் என்பது ஒரு மணி நேரமோ அல்லது சுவாரஸ்யமாக இருந்தால் சில மணி நேரங்களுக்குள்ளே முடிந்து போய்விடக்கூடியது. இதிகாசங்களோ பல நூறு பக்கங்கள் கொண்டதாக இருக்கின்றன. வாசிக்க நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன. அத்தோடு அவற்றால் நமக்கு என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற எண்ணம் உருவாவது இயல்பு தான்.நமது அன்றாட வாசிப்பு குளத்தில் நீந்துவது போன்றது. இதிகாசம் கடலில் நீந்தும் அனுபவம். கடலில் நீந்தும்போது நாம் எல்லையற்ற பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை உணர்வோம். அதே நேரம் நாம் நீந்தும் கடலின் அடியாழத்தில் எத்தனையோ மலைகள் புதையுண்டு இருக்கின்றன. கோடானகோடி உயிர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி பட்டது தான் இதிகாசங்களை வாசிப்பதும்.
எல்லா இதிகாசங்களும் மக்களின் நினைவு தொகுப்புகளே. ஒட்டுமொத்தமான மனப்பதிவுகளின் ஒரு சேகரம் என்று கூட சொல்லலாம்.

மகாபாரதம் என்னும் மகா காவியம்

இந்திய சமூகத்தின் ஆதிநினைவுகள் இதிகாசங்களில் பதிவாகியிருக்கின்றன. இந்திய மனது கொண்ட எழுச்சியும் தடைகளும் அதில் காணக்கிடைக்கின்றன. அதேநேரம் நமது கதை சொல்லும் மரபின் உச்சபட்ச சாதனையாகவும் அது திகழ்கிறது.
மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சூதர்களால் பாடப்பட்டு தான் இலக்கியவடிவம் பெற்றிருக்கின்றன. சூதர்கள் பாடிய மகாபாரதத்தின் பெயர் ஜெயா. அதாவது வெற்றி. வெற்றியை பாடுகின்ற பாடல். ஆனால் வெற்றியை மட்டும் அது கவனம் கொள்ளவில்லை. இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், நகரங்கள் உருவாக்கபட்டதையும், கானகம் எரிக்கபட்டு வனகுடிகள் துரத்தபட்டதையும், அரசாட்சியில் ஏற்பட்ட உள்குழப்பங்கள். மாற்றங்களையும் சேர்ந்தே விவரிக்கிறது.
மகாபாரதத்தை முழுமையாக ஒரு முறை வாசித்து தெரிந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு தேவைப்படும். நம்மில் பெரும்பாலோர் வாசித்துள்ள மகாபாரதம் மிகவும் சுருக்கப்பட்ட பிரதியாகும். அது தண்ணீரில் பார்க்கும் நிலவின் தோற்றம் எனலாம்.
ஆதிபர்வம், சபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சப்திக பர்வம், ஸ்ரீபர்வம், சாந்தி பர்வம், அனுசாசன பர்வம், அஸ்வமேதிக பர்வம், ஆச்ரமவாச பர்வம், மௌசால பர்வம், மகாபிரதஸ்தானிக பர்வம், சொர்க்கரோக பர்வம். என்று பதினெட்டு பருவங்களாக கிட்டதட்ட பதினைந்தாயிரம் பக்கங்கள் கொண்ட மகாபாரதப் பிரதி ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே தமிழில் வெளியாகியிருக்கிறது.
பொதுவில் இதிகாசங்களை நேரடியாக நாமே வாசிப்பதை விடவும் ஒருவர் வாசித்து பொருள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது எளிய வழி. அதன் பிறகு நாமாக படிக்க துவங்கலாம். ஆனால் இதற்கு ஒரு ஆசான் தேவை. அவர் இதிகாசத்தில் ஊறித்திளைத்தவராக இருத்தல் வேண்டும். அப்படி மகாபாரத்தில் ஊறித்திளைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டுமே ஆய்வு செய்வதற்கு பூனாவில் தனியான ஆய்வு நிறுவனமே இருக்கிறது.இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மகாபாரதம் அங்கே தான் நடைபெற்றது என்ற நம்பிக்கையும் சில நினைவிடங்களும் உள்ளன.

இதிகாசங்களை வாசிப்பது எப்படி? -

இதிகாசங்களை வாசிப்பது தனியானதொரு அனுபவம். ஒரு நாவல்,சிறுகதை, கவிதைப் புத்தகம் வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக்கூடியது. பொதுவில் இதிகாசங்களை வாசிப்பது எளிதானதில்லை. அதற்கு வாசிக்கும் ஆர்வத்தை தாண்டிய சில அடிப்படைகள் தேவைப்படுகின்றன.

அந்த அடிப்படைகளில் பத்து விஷயங்கள் மிக முக்கியமானது

1) இதிகாசத்தை ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும். பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம்.

2) எந்த தேசத்தின் இதிகாசமாக இருந்தாலும் அதை வாசிப்பதற்கு மூலப்பிரதியைத் தவிர அதோடு தொடர்புள்ள புராணீகம். வரலாறு, பண்டைய சமூக, கலாச்சார வாழ்வு குறித்த அடிப்படைகள், மற்றும் மொழி நுட்பம், குறீயிட்டு பொருள்கள் போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியம்

3) இதிகாசத்தில் வெளிப்படும் அறம் மற்றும் நீதி கருத்துகள், தத்துவ விசாரம் குறித்து எளிய அறிமுகமாவது அவசியம் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு அதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து விமர்சிக்கும், கண்டிக்கும் மனநிலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்

4) இதிகாசங்கள் தன்னளவில் இயல்பும் அதீதமும் ஒன்று கலந்தவை. கடவுளும் மனிதனும் ஒன்று சேர்ந்து இயங்கும் வெளியது. அதில் எது இயல்பு எது அதீதம் என்று பிரித்தெறிவது சுலபமானதில்லை. இயல்பு, அதீதம் என்பது பற்றி இன்றுள்ள நமது அறிவும் புரிதலும் இதிகாசங்களை வாசிக்கையில் நிறைய மனத்தடைகளை உருவாக்ககூடும். ஆகவே அதையும் சற்றே விலக்கி விட்டு வாசிக்கத் துவங்க வேண்டும்

5) நாவல் போல சிறுகதை போல கதை சொல்லும் முறை ஒன்றிரண்டு மையங்களுக்குள்ளோ, முக்கியமான ஒற்றை சரடிலோ இதிகாசத்தில் இயங்குவதில்லை. ஆகவே பன்முகப்பட்ட கதையிழைகளும், சிறியதும் பெரியதுமான நிறைய கதாபாத்திரங்களும், முன்பின்னாக நகரும் நிகழ்வுகளும், குறியீடுகளும் சங்கேதங்களும், தத்துவ விசாரணைகளும், கவித்துவ உச்சநிலைகளும், அக தரிசனங்களும் உள்ளடக்கியது என்பதால் அவற்றை உள்வாங்கவும் நமக்குள் தொகுத்துக் கொள்ளவும் ஆழ்ந்த கவனம் தேவைபடுகிறது

6) இதிகாசத்தின் கட்டமைப்பு மிக முக்கியமானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும் போது விரிந்த அனுபவம் தரக்கூடியது. ஆகவே அந்தக் கட்டமைப்பின் ஆதாரப்புள்ளியை அறிந்து கொள்வது அவசியமானது. இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோன்றம் கொண்டது. அதற்கு நிறைய உள்அடுக்குள், ரகசிய வழிகள், சாளரங்கள் இருக்கின்றன. அதே நேரம் இந்த கட்டமைப்பு பெரிதும் மாயத்தன்மை கொண்டது என்பதால் எது நிஜம் எது பிம்பம் என்று கண்டறிவதில் குழப்பம் ஏற்படக்கூடும். ஆகவே இதிகாசம் துவங்கும் இடத்தில் கதை துவங்குவதில்லை. இதிகாசம் முடியும் இடத்தில் கதை முடிந்துவிடுவதில்லை.

7) இதிகாசம் கவிதையின் உச்சநிலை. ஆகவே உன்னதமான கவித்துவ எழுச்சியும் உத்வேகமும் அதிகம் காணமுடியும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிநிலைகளையே இதிகாசம் முக்கியம் கொள்கிறது. அதிலும் இயற்கையும் கதாபாத்திரங்களின் மனநிலைகளும் பிரிக்க முடியாதவை. ஆகவே இயற்கையை பற்றிய விவரிப்புகள் மிக முக்கியமானவை.

8) இதிகாசத்தின் பின்னால் இயங்குவது ஒரு நாடோடி மனம். அது எண்ணிக்கையற்ற பாடல்களால் நிரம்பியது. மனிதர்கள் அறிந்த கதையை அவர்கள் அறியாத வண்ணம் சொல்கிறது. அதன் குரல் புராதனமானது. ஆகவே கதை சொல்பவன் ஆழ்ந்த பெருமூச்சுடன் சில நேரங்களில் கதையை விவரிக்கிறான். சில நேரங்களில் உன்மத்தம் ஏறிக் கதையை சொல்கிறான். சில வேளைகளில் சந்நதம் கண்டவன் போல துள்ளுகிறான். சில தருணங்களில் அவன் குரல் பைத்தியநிலையை எட்டுகிறது. இந்த பன்முகப்பட்ட குரல்கள் தான் இதிகாசத்தின் தனிச்சிறப்பு. அதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும்

9) இதிகாசத்திற்கு உடல் இருக்கிறது. அதன் கண் எது, காது எது, எது இதயம், எது கைகால்கள் என்பதை வாசிப்பின் மூலம் ஒரு தேர்ந்த வாசகன் கண்டுபிடித்துவிட முடியும். இதை தான் பலவருடமாக இதிகாசம் வாசிப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

10) இதிகாசங்கள் மதப்பிரதிகள் அல்ல. அவை மதம், மெய்தேடல், உயர்தத்துவ விசாரணை போன்றவற்றை விவரித்தாலும் அவை ஒரு சமூகத்தின் நினைவு தொகுப்புகள் . இதிகாசம் நிறைய கிளைகள் கொண்டது. அதில் ஒன்று தான் மதம்.
படைப்பு - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=166&page=

Sunday, November 23, 2008

சீனாவில் தமிழ்


சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள், இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கி பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து, சீன நாட்டை அடைந்துள்ளனர்.தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மலாக்கா வழியாகத் தென் சீனக் கடலை அடையலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இநதப் பாதை சுற்றுப் பாதையாகும். ஆயிரம் மைல்களுககு அதிகமாகப் பயணதூரம் நீளும். மேலும் பயண நேரத்திலும் பல மாதங்கள் கூடிவிடும்.சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐநூற்றுவர் எனும் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்செள துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சிவவிக்ரகம் குப்லாய்கான் என்னும் புகழ் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்கு சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த கோயில் திருக்காதலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்காதலீசுவன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச் சக்கரவரத்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பெளர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

கி,பி, 1260 ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய சக்கரவர்த்தியான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.இவன்தான் பீஜிங் நகரை நிர்மாணித்து அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவனுடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான்.புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கினான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சியக் காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர. அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இந்நாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீனச் சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

நன்றி: - தென் ஆசியச் செய்தி இதழ் - திராவிட ராணி இதழ்

நன்றி: தமிழம்

Friday, November 21, 2008

நமது இந்தியா


* எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

* பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

* செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

* கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

* உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

* உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

* உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

* 1896ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

* மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

* உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

* உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

* தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

* உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

* உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

* வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

* அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார் 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

* 5000ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

* முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்).

* வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

* உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

* குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

* நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

* காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

* முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

* இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர்கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு ?

நமது இந்தியாதான்


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger